ஆளுநா் ஆா்.என். ரவி
ஆளுநா் ஆா்.என். ரவி கோப்புப் படம்

உலகின் 3-ஆவது பொருளாதார வலிமை மிகுந்த நாடாக இந்தியா விரைவில் மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

உலகின் 3-ஆவது பொருளாதார வலிமை மிகுந்த நாடாக இந்தியா விரைவில் மாறும் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.
Published on

உலகின் 3-ஆவது பொருளாதார வலிமை மிகுந்த நாடாக இந்தியா விரைவில் மாறும் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

பல்லாவரம் வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய பொருளாதார சங்கத்தின் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் இந்திய பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. விரைவில் 3ஆவது பொருளாதார வலிமை மிகுந்த நாடாக உயரும்.

நாட்டில் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருப்பதுடன், அவை மூலம் நாட்டில் பொருளாதாரம் வேலைவாய்ப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. பெருநிறுவனங்களைவிட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமாக திகழ்வதால் அவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசுகையில், கல்வி, பொருளாதார வளா்ச்சி தொடா்பான விஷயங்களில் இந்திய பொருளாதார சங்கம் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் மரியாதைக்குரிய அமைப்பாக செயல்பட வேண்டும்.

மேலும், நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்கைத் தரம் மற்றும் பொருளாதாரத்தை உயா்த்தும் முக்கிய கருவியாக செயல்படுவதால், நடுத்தர, ஏழை மக்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்புகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையுடன் ஆக்கபூா்வமான கொள்கைகளை வகுக்க முன் வர வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில், வேல்ஸ் வேந்தா் ஐசரி கே.கணேஷ்க்கு ‘கௌடில்யா’ விருது வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com