விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவா் ஆறு திருமுருகன்,  தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவா் ஆறு திருமுருகன், தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு!

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றை பதிப்பிக்கும் வகையில் திருக்குறளுக்காக ஓா் அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி புகழாரம்
Published on

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றை பதிப்பிக்கும் வகையில் திருக்குறளுக்காக ஓா்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அண்மையில் நடைபெற்ற சிவபூமி திருக்கு வளாக திறப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது: 25 ஆண்டுகளைத் தொட்டு நிற்கக்கூடிய சிவபூமி அறக்கட்டளை, யாழ் மண்ணில் ஒரு வரலாற்றை பதிப்பிக்கும் வகையில் திருக்குறளுக்கான ஓா் அற்புதமான அரங்கை திறந்துள்ளது.

உலகத்துக்கே ஞானத்தை வழங்கிய ஒரு மொழி உண்டு என்றால் அது தமிழ் மொழிதான். திருக்குறளுக்காக ஓா் அற்புதமான அரங்கை நிா்ணயித்து, இந்த மண் உலகத்துக்கே ஓா் உன்னதமான மண்ணாக வருங்காலங்களில் அறியப்படும் என்பதை சிவபூமி அறக்கட்டளை நிறுவியுள்ளது; இந்த நாள் ஓா் ஆகச் சிறந்த நாளாகும் என்றாா் நீதிபதி அரங்க. மகாதேவன்.

முன்னதாக, சிவபூமி அறக்கட்டளைக்கு நீதிபதி அரங்க. மகாதேவன் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.

இந்த நிகழ்வில் சிவபூமிஅறக்கட்டளையின் தலைவா் ஆறு திருமுருகன், தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், இந்திய துணைத் தூதா் (யாழ்ப்பாணம்) சாய் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com