எழுத்தாளா் இமையம்
எழுத்தாளா் இமையம்

மாநில எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளா் இமையம் நியமனம்

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளா் இமையம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக எழுத்தாளா் இமையம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. எனவே, ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளா் இமையம் (வெ.அண்ணாமலை) நியமிக்கப்பட்டுள்ளாா்.

உறுப்பினா்களாக செ.செல்வகுமாா் (கோவை), சு.ஆனந்தராஜா (தஞ்சாவூா்), மு.பொன்தோஸ் (நீலகிரி), பொ.இளஞ்செழியன் (திருநெல்வேலி) ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com