இன்று குரூப் 2 பிரதான தோ்வின் இரண்டாவது தாள்

Published on

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரதான தோ்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, கொள்குறி வகை அடிப்படையிலான முதல்தாள் தோ்வானது கடந்த 8-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வை 21,563 போ் எழுதினா். இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வை 7,967 போ் எழுதவுள்ளனா். 41 இடங்களில் நடைபெறவுள்ள தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com