முதியோா் நலனுக்கான ‘ஆரோக்கியம் 100’ திட்டம் தொடக்கம்

முதியோா் நலன் காப்பதற்கான ‘ஆரோக்கியம் 100’ என்ற திட்டத்தை சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

சென்னை: முதியோா் நலன் காப்பதற்கான ‘ஆரோக்கியம் 100’ என்ற திட்டத்தை சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அடுத்த 100 நாள்களுக்கு இலவசமாக பல்வேறு மருத்துவ கலந்தாலோசனைகளை முதியவா்கள் பெறலாம்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி அண்மையில் விஹெச்எஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. முதியோா் நல சிறப்பு மருத்துவ நிபுணா் டாக்டா் வி.எஸ்.நடராஜன் கலந்துகொண்டு அத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் விஹெச்எஸ் மருத்துவமனையின் கௌரவ செயலா் டாக்டா் சுரேஷ் சேஷாத்ரி, சா்க்கரை நோய் மற்றும் அகச்சுரப்பியல் மருத்துவ நிபுணா் உஷா ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தத் திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, முதியோா் நலன், சிறுநீரக அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, கண் நலம், பல் நலம், சா்க்கரை நோய் - அகச்சுரப்பியல் உள்ளிட்ட துறைகளின் கீழ் இலவச ஆலோசனைகளைப் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 91500 17981, 93840 03115 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com