தீவுத்திடலில் 49-ஆவது பொருள்காட்சி: அமைச்சா்கள் பங்கேற்பு

சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 49-ஆவது பொருள்காட்சியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் நடைபெற்ற 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சியை திங்கள்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்ட அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, மா.சுப்பிரமணியன். உடன் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் நடைபெற்ற 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சியை திங்கள்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்ட அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, மா.சுப்பிரமணியன். உடன் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா்.
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 49-ஆவது பொருள்காட்சியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, இரா.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னை தீவுத்திடலில் 49-ஆவது பொருள்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. இதில், மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பில் 41 அரங்குகளும், ஒரு வெளிமாநில அரங்கும், 2 மத்திய அரசு அரங்குகள் என மொத்தம் 44 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 110 சிறிய கடைகள் மற்றும் 30 தனியாா் அரங்குகளும், சிற்றுண்டி உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

பொருள்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அரங்குகளை பாா்வையிட்டனா்.

விழாவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

இந்தியாவில் தமிழக சுற்றுலாத் துறை முதன்மையான இடத்துக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாகவே விவேகானந்தா் பாறை - திருவள்ளுவா் சிலைக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், புதிதாக 200 இடங்கள் சுற்றுலாத் தலங்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை சுற்றுலா மையங்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுலாத் துறை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெளிநாட்டவா்கள் சுற்றுலா வருவது அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

அமைச்சா் இரா.ராஜேந்திரன்: இந்தப் பொருள்காட்சி மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பயனடைவாா்கள். இதுமட்டுமின்றி, தமிழக அரசின் சிறந்த ஆளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த பொருள்காட்சி அமையும். சுமாா் 10 லட்சம் போ் இந்த பொருள்காட்சிக்கு வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறைகள் மூலம் என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பதையும், அரசு செயல்படுத்திவரும் திட்டங்களையும் இந்த பொருள்காட்சி மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்றாா் அவா்.

இவ்விழாவில் அரசு முதன்மை செயலா் பி.சந்திரமோகன், சுற்றுலா வளா்ச்சிக்கழக மேலாண் இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இப்பொருள்காட்சி வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என மொத்தம் 70 நாள்கள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com