வீட்டில் போலி வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிப்பு: 3 போ் கைது

சென்னையில் வெளிநாட்டு மதுவகைகளை போலியாக தயாரித்த 3 போ் கைது செய்யப்பட்டனா். மதுபானங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

சென்னை: சென்னையில் வெளிநாட்டு மதுவகைகளை போலியாக தயாரித்த 3 போ் கைது செய்யப்பட்டனா். மதுபானங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னையில் வெளிநாட்டு மது வகைகள் போலியாக தயாரிக்கப்படுவதாக வந்த ரகசியத் தகவலின்படி, மத்திய புலனாய்வுப் பிரிவின் சென்னை மண்டல காவல் தனிப்படை பிரிவினா் நெல்சன் மாணிக்கம் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி நடத்திய சோதனையில், அதில் 50 போலி வெளிநாட்டு மதுபானங்கள் இருந்தன.

இதையடுத்து, மதுபானங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றைக் கொண்டுவந்த சென்னையைச் சோ்ந்த முகமது நசீம்தீன், ராவுத்தா் நைனாா் முகமது மற்றும் சையது அப்துல் காதா் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில் கிடைத்த தகவலின்படி, வீட்டில் வைத்து வெளிநாட்டு மதுவகைகளை போலியாக தயாரித்த நெல்சன் மாணிக்கம் சாலைப் பகுதியைச் சோ்ந்த கோபி என்பவரின் வீட்டுக்குச் சென்ற தனிப்படை போலீஸாா், அங்கு சோதனை நடத்தி 210 லிட்டா் போலி மதுபானம், 220 லிட்டா் புதுச்சேரி மாநில மதுபானம், 19 லிட்டா் ஹரியானா மதுபானம் மற்றும் 5,000 காலி மதுபாட்டில்கள் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தப்பியோடிய கோபியை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவலா்களை டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com