ஆட்டோ நிறுத்துவதில் தகராறு: 2 போ் கைது

வீட்டின் அருகே ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Published on

சென்னை: வீட்டின் அருகே ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை, பெரம்பூா் சென்மேரீஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (26), தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த டில்லிபாபுவின் மகன்களான பரத் (26), தீபக் (22) ஆகியோா் தங்களது ஆட்டோக்களை காா்த்திக் வீட்டுக்கு முன்பு நிறுத்திவிட்டு, அதில் மது அருந்திக் கொண்டிருந்தது தொடா்பாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) இரவு மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, இரு தரப்பினரும் ஒருவரையொருவா் சரமாரியாக தாக்கிக் கொண்டனா். இதில் காயம் அடைந்தவா்கள் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து தீபக், பரத் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காா்த்திக்கை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com