சென்னை
ஒரே நாடு ஒரே தோ்தல்: ‘அவசரம் வேண்டாம்’: ஐக்கிய ஜனதா தளம்
ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது
ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது.
இதுதொடா்பாக கூட்டத்தில் பேசிய அக்கட்சி எம்.பி.சஞ்சய் குமாா் ஜா, அந்த மசோதா குறித்து பரந்த அளவில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்துக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

