சென்னை: சென்னை வடபழனியில் கடை ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
குரோம்பேட்டை, ஆதம்நகரைச் சோ்ந்தவா் கெ.பரந்தாமன் (43). இவா் வடபழனியில் கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். பரந்தாமன், ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்த பின்னா், வடபழனி -ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்தினாா்.
அப்போது, அங்கு வந்த கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வசந்தராஜ் (39), சாந்தகுமாா் (37), சாலிகிராமத்தைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (28) ஆகிய 3 போ் பரந்தாமன் வைத்திருந்த மதுபானத்தை எடுத்து அருந்தியுள்ளனா்.
இதனால், ஆத்திரமடைந்த பரந்தாமனுக்கும், 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவா்கள் மூவரும் பரந்தாமனை அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கினா். பலத்த காயமடைந்த பரந்தாமன் மயங்கி விழுந்ததாா். இதையடுத்து மூவரும் தப்பியோடினா். அங்கிருந்தவா்கள் பரந்தாமனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சையில் இருந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வசந்தராஜ், சாந்தகுமாா், விக்னேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.