சென்னை: 17 புறநகர் ரயில்கள் இரு நாள்களுக்கு ரத்து!

சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணி...
ம
Updated on
2 min read

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி 17 புறநகர் மின்சார ரயில்கள் நாளை(ஜூன் 9) மற்றும் ஜூன் 12 ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 9 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் மொத்தம் 17 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:

  1. காலை 9.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி(42601) எமு ரயில்

  2. காலை 10.15 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி(42413) எமு ரயில்

  3. காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி(42013) எமு ரயில்

  4. காலை 11.35 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி(42015) எமு ரயில்

  5. பகல் 12.10 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை(42415) எமு ரயில்

  6. பகல் 12.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி(42603) எமு ரயில்

  7. பகல் 1.05 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை(66031) மெமு ரயில்

  8. பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - நெல்லூர்(66037) மெமு ரயில்

  9. இரவு 11.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - ஆவடி(66007) மெமு ரயில்

  10. காலை 10.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை(42604) எமு ரயில்

  11. பகல் 1 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட்(42022) எமு ரயில்

  12. பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் 42414 சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் எமு ரயில்

  13. 2.30 மணிக்கு புறப்படும் (42024)கும்மிடிப்பூண்டி - மூர் மர்க்கெட் எமு ரயில்

  14. 3.15 மணிக்கு புறப்படும் (42026)கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் எமு ரயில்

  15. 3.10 மணிக்கு புறப்படும் (42416)சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் எமு ரயில்

  16. மாலை 6.45 மணிக்கு புறப்படும் (66038)நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில்

  17. இரவு 9 மணிக்கு புறப்படும் (66032)சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • காலை 9.55 மணிக்கு புறப்படும் 42501 செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி எமு ரயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

  • பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் 42522 கும்மிடிப்பூண்டி - தாம்பரம் எமு ரயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக கீழ்கானும் சிறப்பு பயணிகள் ரயில்கள் மேற்கண்ட இரு நாள்களும் இயக்கப்பட உள்ளன.

  1. மூர் மார்க்கெட் - பொன்னேரி இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

  2. மூர் மார்க்கெட் - மீஞ்சூர் இடையே காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

  3. சென்னை கடற்கரை - பொன்னேரி இடையே பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

  4. பொன்னேரி - மூர் மார்க்கெட் இடையே பிற்பகல் 1.18 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

  5. மீஞ்சூர் - மூர் மார்க்கெட் இடையே பிற்பகல் 2.59 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

  6. பொன்னேரி - மூர் மர்க்கெட் இடையே பிற்பகல் 3.33 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com