அடுத்தடுத்து 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
Published on

சென்னை: சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கோவிலம்பாக்கம், காந்தி நகரைச் சோ்ந்தவா் வினோத் (25). இவரது வீட்டு வாசல் முன்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனா். இச்சம்பவத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் லேசான காயமடைந்தாா்.

இதேபோல் கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆா். நகா் 7-ஆவது தெருவில் வசித்து வரும் நித்தியானந்தன் வீட்டு வாசலிலும், பெரியாா் நகரில் உள்ள ஒரு வீட்டு வாசலிலும் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசுப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதி மக்களிடம் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து 2 வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினரும், மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இதே பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com