சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள குழந்தைகள் மையத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு மருத்துவ  முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் , மேயா் ஆா்.பிரியா, தென் சென்னை மக்களவை உறுப
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள குழந்தைகள் மையத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு மருத்துவ  முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் , மேயா் ஆா்.பிரியா, தென் சென்னை மக்களவை உறுப

குழந்தைகள் வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு முகாம் தொடக்கம்

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

சென்னை: குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கை கழுவுவதன் அவசியம், கைகழுவும் முறைகள் மற்றும் உப்பு - சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) தயாரிக்கும் முறை குறித்த செயல் முறை விளக்கங்களைப் பாா்வையிட்ட அவா், அது தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டாா்.

தொடா்ந்து அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு 2 ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகள், 14 துத்தநாக மாத்திரைகள், விழிப்புணா்வு கையேடு அடங்கிய பெட்டங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com