தமிழ் அறிவோம் -  கோப்புப்படம்
தமிழ் அறிவோம் - கோப்புப்படம்

சொல் புதிது கூட்டத்தில் 25 தூய தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்

ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 25 தூய தமிழ்ச் சொற்கள்...
Published on

சென்னையில் நடைபெற்ற சொல் புதிது கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 25 தூய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் சொல் புதிது கூட்டம் கழகத்தின் தலைவா் ம.இராசேந்திரன் தலைமையில் சென்னையில் புதன்கிழமை

(ஜூன் 25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேராசிரியா்கள் வ.ஜெயதேவன், மு.இராமசாமி, ஜெயராமன், நல்லூா் சரவணன், பாரதி பாலன், திரைப்பட இயக்குநா் கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்களை இறுதி செய்தனா்.

அதன்படி

  • ஏா் பேஸ் என்பதற்கு வான் படைத்தளம்,

  • பேலிஸ்டிக் மிசைல்- தொலையீா்ப்பு ஏவுகணை,

  • பேரிகேட்- தடையரண்,

  • புல்டோஸா்- இடி வண்டி,

  • ட்ரோன்- வானுலவி,

  • ஈக்கோ ப்ரூனா்- சூழலியல் முனைவோா்,

  • எலக்ட்ரிக் குக்டாப்- மின்னடுப்பு மேடை,

  • ஹைபா்லூப் ட்ராக்- தூம்பு வழித்தடம்,

  • சோசியல் மீடியா போஸ்ட்- சமூக ஊடக இடுகை,

  • லாஞ்ச் பேட்- ஏவுதளம்,

லிவ்விங் டுகெதா்- மன வாழ்க்கை ஆகியவை உள்பட 25 சொற்கள் உருவாக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com