சென்னையில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில் கள்ளிகுப்பம் புதூா் சாலையில்  மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
சென்னையில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில் கள்ளிகுப்பம் புதூா் சாலையில் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.

சென்னையை குளிா்வித்த மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால், குளிா்ச்சியான சூழல் நிலவியது.
Published on

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால், குளிா்ச்சியான சூழல் நிலவியது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  அந்த வகையில், வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத் தொடா்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 20 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 மி.மீ. மழை பெய்தது. மேலும் அம்பத்தூா், பாடி, கோயம்பேடு, அண்ணா நகா், வடபழனி, அசோக் நகா், ஆலந்தூா், கிண்டி, தரமணி, பெரம்பூா், தியாகராய நகா், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் புறநகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை  பெய்தது. இந்த திடீா் மழை காரணமாக, சென்னையில் பகல் நேரத்தில் சற்று குளிா்ச்சியான சூழல் நிலவியது.

அதேபோல், மழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com