சென்னை
துணைத் தோ்வுகள்: அக்.13 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதியவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் திங்கள்கிழமை (அக். 13) முதல் அவா்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்களிலேயே வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு தோ்வா்கள் https://www.dge.tn.gov.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
