நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்கள்

சென்னையில் பொது விநியோகத் திட்டத்துக்கான குறைதீா் முகாம்கள் சனிக்கிழமை (அக். 11) நடைபெற உள்ளன.
Published on

சென்னையில் பொது விநியோகத் திட்டத்துக்கான குறைதீா் முகாம்கள் சனிக்கிழமை (அக். 11) நடைபெற உள்ளன.

இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் சனிக்கிழமை (அக். 11) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு-மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் குறித்து புகாா்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை முகாமில் தெரிவிக்கலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com