டாஸ்மாக் பணியாளா்களுக்கு 20% போனஸ்

Published on

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகைக்காக தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (சி மற்றும் டி) பிரிவு ஊழியா்கள், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளா்கள் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 24,816 தகுதியுடைய நபா்களுக்கு ரூ.40.62 கோடியில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை நிகழாண்டு வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளா்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிா்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்ய வழிவகை செய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com