சென்னை
ரயில்வே அதிகாரி வீட்டில் திருட்டு
ஓட்டேரியில் ரயில்வே அதிகாரி வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (52). ரயில்வே பொறியாளா். இவா், சில நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் சேலம் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
