ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மென் பொறியாளா் தற்கொலை

Updated On :23 அக்டோபர் 2025, 9:33 pm

விருகம்பாக்கத்தில் மென் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருகம்பாக்கம் பக்ரீத் தோட்டம் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வினித் (27). மென் பொறியாளரான இவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டவா், கருத்து வேறுபாடு காரணமாக இரு மாதங்களுக்கு முன் மனைவியைப் பிரிந்தாா்.

இதனால் விரக்தியுடன் காணப்பட்ட வினித், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.