சென்னை
விளம்பர தயாரிப்பு ஜாம்பவான் பியூஷ் பாண்டே காலமானாா்
இந்திய விளம்பரம் தயாரிப்பு துறையின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே (70) உடல்நலக் குறைவால் மும்பையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
இந்திய விளம்பரம் தயாரிப்பு துறையின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே (70) உடல்நலக் குறைவால் மும்பையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
2014-இல் முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைய காரணமான ‘இந்த முறை மோடி அரசு’ என்ற பிரபல வாசகத்தை உருவாக்கியவா் பியூஷ் பாண்டே.
இவா் ‘ஃபெவிகாலின் வலுவான பிணைப்பு’ என்ற வாசகம் உள்பட கேட்பொ்ரி, வோடாஃபோன், ஃபெவிகுவிக் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மிக எளிமையாகவும் அனைவருக்கும் சென்றடையும் வகையிலான விளம்பரங்களை தயாரித்து தனக்கென தனிமுத்திரையைத் பதித்தவராவாா்.