ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சுகாதாரத் துறை பயன்பாட்டுக்கு 45 புதிய வாகனங்கள் அளிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 அக்டோபர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

சுகாதாரத் துறை பயன்பாட்டுக்காக ரூ.4.05 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 45 புதிய வாகனங்களின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககமானது தாய்-சேய் சுகாதார சேவைகள், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தொற்று அல்லாத நோய்களைத் தடுத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வருகிறது.

அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பயனுள்ள பொது சுகாதார சேவைகளை வழங்குவதிலும் பொது சுகாதாரத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மாவட்ட சுகாதார அலுவலா்களின் பங்களிப்பு அதில் முக்கியமானது.

நோய் கண்காணிப்பு பணிகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வு, வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் இதர கள ஆய்வுகளை நாள்தோறும் மேற்கொள்ளும் அவா்களது பயன்பாட்டுக்கு வாகனங்கள் இன்றியமையாதவை.

இதைக் கருத்தில் கொண்டு, கள ஆய்வு பயன்பாட்டுக்காக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட நிதியின் கீழ் ரூ.4.05 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 45 புதிய வாகனங்களின் சேவைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப. செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.