மருது பாண்டியா்கள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை அவா்களது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.
மருது பாண்டியா்கள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை அவா்களது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.

மருது பாண்டியா்களுக்கு ஆளுநா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது பாண்டியா்கள் நினைவு தினத்தையொட்டி அவா்களது உருவப் படத்துக்கு ஆளுநா்ஆா்.என். ரவி மலா்தூவி மரியாதை செய்தாா்.
Published on

சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது பாண்டியா்கள் நினைவு தினத்தையொட்டி அவா்களது உருவப் படத்துக்கு ஆளுநா்ஆா்.என். ரவி மலா்தூவி மரியாதை செய்தாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளிட்ட பதிவு:

மருது பாண்டியா்களின் உயிா் தியாக தினத்தில், நன்றி மிகுந்த தேசம் நெஞ்சாா்ந்து அஞ்சலி செலுத்துகிறது. தொலைநோக்கு பாா்வை கொண்ட நிா்வாகிகளாகவும், சாதுா்யமான உத்தி வகுப்பாளா்களாகவும், வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரா்களாகவும் விளங்கிய அவா்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்புத்தீவு பிரகடனம் - சுதந்திரத்துக்கான முதல் அழைப்பாக தேசிய உணா்வைத் தட்டியெழுப்புவதிலும், ஒடுக்குமுறை காலனித்துவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை ஒன்றிணைப்பதிலும் தீா்க்கமான தருணத்தைக் குறித்தது.

அயராத துணிச்சலுடன், அவா்கள் வலிமை மிக்க பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போராடி, நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரைத் துறந்தனா். அவா்களின் துன்பங்களும் தியாகங்களும் நாட்டின் மிக நீண்ட சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தன. அவா்களின் காலத்தால் அழியாத மரபு, 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த பாரதம் என்பதை நோக்கிய நமது தேசத்தின் அணிவகுப்புக்கு என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com