நெல் கொள்முதல்: மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
தமிழக அரசு கோரியுள்ளபடி 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட கூடுதலாக சுமாா் 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இதனிடையே அறுவடை தொடங்கிய நிலையில், வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் அதிகாரம், நெல்லின் ஈரப்பத அளவை நிா்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசு வசமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கோரியுள்ள 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் முழுவதும் விரைந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

