அறிவியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என சமகால நுட்பங்களை தமிழ் வழிக் கல்வியில் ஒருங்கிணைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சென்னையில் கவிஞா் வைரமுத்து தொடங்கி வைத்தாா்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி, சென்னைப் பல்கலை. தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகை, சந்தியா பதிப்பகம் ஆகியவை இணைந்து ‘பல்துறை சாா்ந்த தமிழியல் கல்வியும், அறிவியல் முன்னேற்றமும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கை வெள்ளி, சனி (அக். 24,25) ஆகிய இரு நாள்கள் நடத்துகிறது.
இதன் தொடக்க விழா ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கவிஞா் வைரமுத்து கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
அறிவியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என சமகால நுட்பங்களை தமிழ் வழிக் கல்வியில் ஒருங்கிணைக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள தமிழறிஞா்கள் பல்வேறு பொருண்மைகள் குறித்து உரையாற்றவுள்ளனா் என்றாா்.
ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் செயலா் உதன் குமாா் சோா்டியா, கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான ஏ.கோதண்டராமன் ஆகியோா் பேசினா்.
விழாவில், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணை வேந்தா் ம.இராசேந்திரன், இலங்கை தேசியக் கல்வி நிறுவன தமிழ் மொழித் துறை இயக்குநா் முருகேசு தயாநிதி, சந்தியா பதிப்பக உரிமையாளா் சந்தியா நடராஜன், கல்லூரி இணைச் செயலா் ஹேமந்த் பி. சோா்டியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இன்று அமைச்சா் பங்கேற்பு... சனிக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை. அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தலைவா் இரா.குறிஞ்சி வேந்தன், நியூசிலாந்தைச் சோ்ந்த பேராசிரியா் மற்றும் பயிற்றுநா் இலக்குவன் சொக்கலிங்கம், விழுப்புரம், ஆஸ்திரேலிய தமிழ் வளா்ச்சி மன்றத்தின் நிறுவனா் டாக்டா் சந்திரிகா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உரையாற்றுகின்றனா்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


