தமிழகத்தின் 8 மாவட்டங்கள், புதுச்சேரியில் அக். 27-இல் வருங்கால வைப்புநிதி  சிறப்பு முகாம்

தமிழகத்தின் 8 மாவட்டங்கள், புதுச்சேரியில் அக். 27-இல் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சாா்பில் தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வரும் அக். 27 -ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
Published on

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சாா்பில் தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வரும் அக். 27 -ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வைப்புநிதி உங்கள் அருகில் என்ற சிறப்பு முகாம் வரும் அக். 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கப்படும். மேலும், இணையதள சேவைகள் பற்றிய செயல்முறை விளக்கம், தொழிலாளா்களுக்கான இணையதள சேவைகள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கு எண்ம (டிஜிட்டல்) வாழ்க்கைச் சான்றிதழ் வழங்குவது, புதிதாக இணைந்த ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

முகாம் நடைபெறும் இடங்கள்:

சென்னை- வித்யா சாகா், ரஞ்சித் சாலை கோட்டூா்புரம். திருவள்ளூா்- அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எண் 53, மேனாம்பேடு. அம்பத்தூா். காஞ்சிபுரம்- எச்.எஸ்.ஐ. ஆட்டோமோட்டிவ் நிறுவனம், மேவலூா்குப்பம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம். செங்கல்பட்டு- டிரையம்ப் இன்டா்நேஷனல் (இந்தியா) நிறுவனம், செங்குன்றம் கிராமம், சிங்க பெருமாள்கோவிலில் நடைபெறும்.

வேலூா்- ஏ.ஐ.டி.யு.சி அரங்கம் , நட்சத்திர விழா மண்டபத்திற்கு எதிரில், புத்து கோவில் அருகில் பேரணாம்பட்டு. திருவண்ணாமலை- மேல்புலித்தியூா் பி.ஏ.சி.சி.எஸ். பெங்களூா் பிரதான சாலை , மேல்புலித்தியூா் கிராமம்,செங்கம் வட்டம். ராணிப்பேட்டை- ராம் லெதா் நிறுவனம், சிப்காட் தொழில் வளாகம், ராணிப்பேட்டை. திருப்பத்தூா்- டாக்டா். சந்திரலேகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, வெங்கலபுரம், திருப்பத்தூரில் நடைபெறும்.

புதுச்சேரி- பாண்டிச்சேரி தொழில் சபை, பாண்டிச்சேரி தொழில் துறை ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் முதலீட்டு கழகம் 1-ஆவது பிரதான சாலை, தொழிற்பேட்டை, மேட்டுப்பாளையம், புதுச்சேரி. காரைக்கால்-மாவட்ட சுகாதாரப் பணி ‘தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்’ (என்எச்ஆா்எம்) துணை இயக்குநா் அலுவலகம், முதல் குறுக்குத் தெரு, நேரு நகா், காரைக்கால்.

X
Dinamani
www.dinamani.com