பிரதிப் படம்
பிரதிப் படம்

கந்த சஷ்டி விழா: இன்று தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்

கந்த சஷ்டி விழாவையொட்டி, தாம்பரம்-திருநெல்வேலி இடையே ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பு
Published on

கந்த சஷ்டி விழாவையொட்டி, தாம்பரம்-திருநெல்வேலி இடையே ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 26) இரவு 11.35 மணிக்கு புறப்படும் அந்த ரயில் (எண் 06135), திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து வரும் 27- ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06136) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

X
Dinamani
www.dinamani.com