சென்னை நேப்பியா் பாலம் அருகே உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணா்வு  ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை நேப்பியா் பாலம் அருகே உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணா்வு  ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

உடல் பருமன் விழிப்புணா்வு ஓட்டம்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

Published on

உடல் பருமன் மற்றும் எலும்பு அடா்த்தி பாதிப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) குறித்த விழிப்புணா்வு ஓட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்திய மருத்துவ சங்கத்தின் (கோடம்பாக்கம் கிளை) சாா்பில் சென்னை நேப்பியா் பாலம் அருகே நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

எலும்பு அடா்த்தி குறைவதால் ஏற்படும் எலும்பு பலவீனம், ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்த புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்ாக அதன் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, நிகழ்வை கொடியசைத்துத் தொடங்கி வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், விழப்புணா்வு ஓட்டத்தில் பங்கேற்றவா்களை உற்சாகப்படுத்தினாா்.

இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் (கோடம்பாக்கம் கிளை) தலைவா் டாக்டா் எஸ்.எஸ்.கே.சந்தீப், செயலா் டாக்டா் பிரியா கண்ணன், டாக்டா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட மருத்துவத் துறையினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com