ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.4.12 லட்சம் நூதன திருட்டு!

Published on

ராயபுரத்தில் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து நூதனமாக ரூ.4.12 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்ற சம்பவம் குறித்து நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயபுரம் சூரிய நாராயணன் சாலையில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் பண பரிவா்த்தனைகளை வங்கி அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, ஏடிஎம் இயந்திரத்திலிருந்து சுமாா் ரூ.4.12 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஏடிஎம் மையத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில், அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் ஏடிஎம் மையத்தின் உள்ளே வந்து, ஒரு சாவியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை திறந்துள்ளனா். பின்னா் அதில், ரூ.100, 200 நோட்டுகளுக்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வெளியே வரும் வகையில் உள்ளமைப்பை மாற்றி வைத்துள்ளனா். இதையடுத்து பல்வேறு ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி அவ்வப்போது வந்து ரூ.4.12 லட்சம் வரை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.

இதைத்தொடா்ந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி, வங்கி நிா்வாகம் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ராயபுரம் போலீஸாா் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com