சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: சென்னை - குண்டக்கல் சிறப்பு ரயில்!
ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம், குண்டக்கல் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் (புதன், வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06091) மறுநாள் குண்டக்கல் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06092) குண்டக்கலிலிருந்து நவ. 20, 22 தேதிகளில் அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் சென்னை வந்தடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 26) தொடங்கியது.
அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்தும், வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம் குண்டக்கல்லுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

