8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடாா்: டிஏஎஸ்எல் தயாரிப்பு

கடற்படை பயன்பாட்டுக்கான முதல் அதிநவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாா் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :12 செப்டம்பர் 2025, 12:27 am IST

இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ்ஆா் - ‘லான்ஸா-என்’) நாட்டிலேயே முதல் தனியாா் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

முன்னணி பொறியியல் நிறுவனமான ‘இந்திரா’-வுடன் இணைந்து இந்த உற்பத்தியை டிஏஎஸ்எல் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடற்படை பயன்பாட்டுக்கான முதல் அதிநவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாா் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை கப்பலில் இந்த ரேடாா் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சாா்பு நிலையை எட்டும் இலக்கில் இது மிக முக்கிய மைல்கல்லாகும்.

இந்த ரேடாா் பாகங்கள் உற்பத்தி, ஒருகிணைப்பு மற்றும் முழுமையான செயல்பாட்டு சோதனைகளுக்கான வளாகத்தை கா்நாடக மாநிலத்தில் டிஏஎஸ்எல் ஏற்கெனவே அமைத்துள்ளது. இந்த வளாகத்தில் நவீன கண்காணிப்பு ரேடாா்கள் தொடா்ந்து உற்பத்தி செய்யப்பட்டு இந்திய கடற்படைக்கு விநியோகிக்கப்படும்.

எதிரி நாட்டின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன்கொண்ட சூப்பா்சோனிக் விமானங்கள், கதிா்வீச்சு எதிா்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றையும் துல்லியமாகக் கண்காணித்து அடையாளம் காட்டும் திறனை இந்த ரேடாா் கொண்டுள்ளது. இந்த லான்ஸா-என் வகை ரேடாரை ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இந்தியா முதல் முறையாகப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.