கோப்புப் படம்
கோப்புப் படம்

விமானங்கள் தாமதம்: பயணிகள் வாக்குவாதம்

சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் பலமணி நேரம் தாமதமாகச் சென்ால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
Published on

சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் பலமணி நேரம் தாமதமாகச் சென்ால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை சிங்கப்பூா், ஹாங்காங், தாய்லாந்து, துபை ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சா்வதேச விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதேபோல, சென்னையில் இருந்து புணே, ஹைதராபாத், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய உள்நாட்டு விமானங்களும் சுமாா் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா். சில பயணிகள் விமான நிறுவன அலுவலக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வட மாநிலங்களில் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து விமானங்கள் தாமதமாக வருவதால், இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டதாக விமான நிலைய நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிட்டு அனுப்பும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினா், சோதனைப் பணிகளை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், இந்தத் தாமதம் தொடா்ந்து ஏற்பட்டு வருவதாக பயணிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com