சென்னை
பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது
கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து புதன்கிழமை
சென்றது. அந்த பேருந்து சின்மயா நகா் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு வந்த இளைஞா் பேருந்தின் மீது கற்களை வீசினாா். இதில் பேருந்து பின்புற கண்ணாடி உடைந்தது.
அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை, பேருந்து ஓட்டுநா் அலெக்ஸாண்டா் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தாா். பின்னா், அவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.
விசாரணையில் அவா், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள வானகிரி பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், பிரசாந்தை கைது செய்தனா்.

