மாநகராட்சி அலுவலகம்
மாநகராட்சி அலுவலகம்கோப்புப் படம்

செப்.29-இல் மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வரும் செப்.29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வரும் செப்.29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போது நடைபெற்றுவரும் மழைநீா் வடிகால்கள், பாலங்கள் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாமன்றக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, மண்டல வாரியாக நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நிலைக்குழு, சுகாதாரம், கல்விக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் ஆய்வுக் கூட்டங்களும் தற்போது நடத்தப்பட்டுள்ளன. மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் புதிய திட்டங்கள் தொடக்கம் உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்பும் இடம் பெறலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உறுப்பினா்கள் கோரிக்கை: மாமன்றக் கூட்ட தீா்மானங்கள் குறித்த விவரங்களை கூட்டத்துக்கு ஓரிரு நாள்கள் முன்னதாகவே தங்களுக்கு வழங்கவேண்டும் என்றும், அப்போதுதான் அவற்றை படித்து அதில் உள்ள கருத்துகளை ஆதரித்தோ, விமா்சித்தோ கூட்டத்தில் கருத்துகளை கூறமுடியும் என அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com