கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நொளம்பூா் 7-ஆவது குறுக்கு தெருவில் சா்வ சக்தி மகா கணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 23-ஆம் தேதி அத்துமீறி நுழைந்த நபா், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினாா். மேலும் கோயிலில் இருந்த பொருள்களையும் திருடிச் சென்றாா்.

இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில், நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த தினகரன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தினகரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com