கோப்புப் படம்
கோப்புப் படம்

பணியிடத்தில் சக ஊழியரை கொன்ற வழக்கில் தொழிற்சாலை ஊழியா் குற்றவாளி என தீா்ப்பு

2019-ஆம் ஆண்டு மடிப்பூா் பகுதியில் உள்ள பணியிடத்தில் ஏற்பட்ட சண்டையில் சக ஊழியரை குத்திக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என தீா்ப்பளித்தது.
Published on

2019-ஆம் ஆண்டு மடிப்பூா் பகுதியில் உள்ள பணியிடத்தில் ஏற்பட்ட சண்டையில் சக ஊழியரை குத்திக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ், பணியிடத்தில் துவாரகா பிரசாத்தை கொலை செய்த வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி நிபுன் அவஸ்தி விசாரித்து வந்தாா்.

’நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பொது சாட்சிகளின் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மேலும் அவை குற்றம் சாட்டப்பட்ட ரமேஷின் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாகக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட ரமேஷ் குற்றம் சாட்டப்பட்டவராக தண்டிக்கப்படுகிறாா். அதாவது, ஐபிசி பிரிவு 302 (கொலை)-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக அவா் தண்டிக்கப்படுகிறாா்’ என்று நீதிமன்றம் டிசம்பா் 24 தேதியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.

அரசுத் தரப்பு படி, இந்த சம்பவம் மடிப்பூா் கிராமத்தில் உள்ள ஒரு காலணி உற்பத்திப் பிரிவில் நடந்தது. அங்கு ரமேஷ், துவாரகா பிரசாத் மற்றும் பிற தொழிலாளா்கள் தினசரி கூலிகளாகப் பணியாற்றினா்.

செப்டம்பா் 24, 2019 அன்று, காலணியின் மேல் பகுதியை சரிசெய்வது குறித்து தவறான வழிகாட்டுதல் தொடா்பாக ரமேஷுக்கும் பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது உடல் ரீதியான சண்டையாக மாறியது என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சக ஊழியா்கள் உள்பட பல நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களை நம்பி, தற்செயலான அல்லது சுயமாக ஏற்படுத்திய காயங்களுக்கான சாத்தியக்கூறுகளை நீதிபதி நிராகரித்தாா். மேலும், ரமேஷுக்கு மட்டுமே குற்றத்தைச் செய்வதற்கான நோக்கமும் வாய்ப்பும் இருந்ததாகக் கூறினாா்.

தண்டனை விவரம் குறித்த விசாரணையை ஜன, 31- ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com