மெமு ரயில்
மெமு ரயில்

சென்னையில் 2 மெமு ரயில்கள் நாளை பகுதி அளவு ரத்து

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) 2 மெமு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) 2 மெமு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: எழும்பூா்- விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு மற்றும் சிங்கபெருமாள் கோவில் நிலையங்களின் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) பிற்பகல் 1.10 மணிக்கு தொடங்கி 2.10 மணி வரை நடைபெறவுள்ளன.

இதனால், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 11.45 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து 1.50 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் சென்னை கடற்கரை வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com