விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: போக்குவரத்து நெரிசல்!
பள்ளி அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடா் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களிலிருந்து மக்கள் சென்னை திரும்பியதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கடந்த டிச.24 -ஆம் தேதி தொடங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடா் விடுமுறைகள் காரணமாக சென்னை வாசிகள் பலரும் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.5) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் சனிக்கிழமை இரவு முதலே சொந்த ஊா்களிலிருந்து சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வாயிலாக சென்னைக்கு திரும்பத் தொடங்கினாா்.
இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 1 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று, மெதுவாக ஊா்ந்து சென்றன.

