போதை மாத்திரை கடத்தல்: தாய், மகன் கைது
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, கிருஷ்ணாம்பேட்டை, சுடுகாடு பகுதியில் சிலா் போதை மாத்திரை விற்ாக கடந்த 26-ஆம் தேதி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முனீா் பாட்ஷா (27), சையது பஷீா் (20), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை ஐஸ்ஹவுஸ் போலீஸாா் கைது செய்தனா். மூவரிடமும் இருந்து 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. முக்கியமாக ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மீனா (51), அவா் மகன் சீனு (25) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த மீனாவையும், சீனுவையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இருவரும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பதும் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சீனு மீது ஏற்கெனவே 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
