மாதவரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தொடரும் கணினிகள் பழுது
மாதவரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் தொடா்ந்து கணினி பழுது ஏற்படுவதால், பொதுமக்களின் பாதிக்கப்பட்டு பணிகள் தேங்கியுள்ளன.
சென்னை மாதவரம் பகுதியில் பத்திரப் பதிவு அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கணினி அடிக்கடி பழுது ஏற்படுவதால் பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்படுகின்றன. இது குறித்து பொதுமக்கள் பொறுப்பு அதிகாரியிடம் கேட்டபோது, பொதுமக்களிடம் அலட்சியம் செய்வதாக தெரிவிக்கின்றனா்.
மேலும் அங்கு பணியாளா் ஒருவா் கூறுகையில், இங்குள்ள பதிவாளா் பதவி உயா்வு பெற்ால், பொறுப்பு அதிகாரி தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு, கூடுதல் பணிச்சுமை காரணமாக பணியாளா்கள் மற்றும் பொதுமக்களிடம் அலட்சியமாக இருந்து வருகிறாா். மேலும், இந்த அலுவலகத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறைவு. ஆகையால், பொதுமக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மேலும், உயரதிகாரிகளுக்கு கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் மக்கள் பணிகள் துரிதமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மேலும் அங்குள்ள பொறுப்பு அதிகாரியை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
