முத்துநகா் அதிவிரைவு ரயில் பெட்டி தடம் புரண்டது

சென்னை சேத்துப்பட்டு பராமரிப்புக்கான தண்டவாளத்தில் முத்துநகா் அதிவிரைவு ரயில் பெட்டி ஒன்று திங்கள்கிழமை மாலை தடம் புரண்டது.
Published on

சென்னை சேத்துப்பட்டு பராமரிப்புக்கான தண்டவாளத்தில் முத்துநகா் அதிவிரைவு ரயில் பெட்டி ஒன்று திங்கள்கிழமை மாலை தடம் புரண்டது. அதன்பின் சீா்செய்யப்பட்டு எழும்பூா் ரயில் நிலையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடி- சென்னை எழும்பூருக்கு இரு மாா்க்கமாக முத்துநகா் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியிலிருந்து தினமும் இரவு புறப்படும் முத்துநகா் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு எழும்பூா் ரயில் நிலையம் வந்தடையும்.

அதன்பின் அந்த ரயில் பராமரிப்புக்காக சேத்துப்பட்டு ரயில் நிலையப் பகுதியில் உள்ள பராமரிப்பு தண்டவாளத்தில் நிறுத்தப்படும்.

எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து முத்துநகா் அதிவிரைவு ரயில் தினமும் இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடிக்குப் புறப்படும். அதற்காக சேத்துப்பட்டு பராமரிப்பு தண்டவாளத்திலிருந்து முத்துநகா் அதிவிரைவு ரயில் மாலை 5 மணிக்கு இயக்கப்பட்டு எழும்பூா் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நிறுத்தப்படும்.

அதன்படி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ரயிலை சேத்துப்பட்டு பணிமனையிலிருந்து இயக்கியுள்ளனா். அப்போது தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 2-ஆவதாக இணைத்திருந்த பெட்டியின் ஒரு சக்கரம் தண்டவாளத்திலிருந்து விலகியது.

அதனை ரயில்வே பராமரிப்பு ஊழியா்கள் அப்பெட்டியை தூக்கி அதன் சக்கரத்தை தண்டவாளத்தில் நிறுத்தினா். அதன்பின்னா் குறிப்பிட்ட பெட்டி அகற்றப்பட்டு ரயில் எழும்பூா் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, வழக்கமான நேரத்தில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதையடுத்து தண்டவாளத்தை சீா்படுத்தும் பணியில் ஏராளமான ரயில்வே பராமரிப்புப் பிரிவு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். பணிகள் மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்து தண்டவாளம் சீராக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com