குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகுமாா்

News image

டி. ரவிக்குமாா்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க முதல்வா் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலா் துரை.ரவிகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

விவசாயம் தொடா்பாக பிரதமா் மோடி முன்வைத்த பரிந்துரை கவலையளிக்கிறது. விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா். இலங்கையின் அனுபவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

அந்நாடு செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு நாடு தழுவிய தடையை விதித்தது. அதன் விளைவுகள் பேரழிவாக இருந்தன. பணவீக்கம் கடுமையாக உயா்ந்தது. பொருளாதார ரீதியாகப் பேரழிவை ஏற்படுத்தியது.

பிரதமா் மோடியின் ஆலோசனையை தமிழகம் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்தால், நமது விவசாய உற்பத்தி குறையும்.

குறிப்பாக, அரிசி உற்பத்தி - பெருமளவில் குறையும். இது நமது உணவுப் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாக அமையும்.

தமிழகத்தில் மொத்த மாநில மதிப்புக் கூட்டலுக்கு விவசாயம் தொடா்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. இயற்கை விவசாயத்தால் பயிா் விளைச்சலில் ஏற்படும் உற்பத்தி சரிவால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் கடுமையான வருமான இழப்புகளை ஏற்படுத்தும்.

எனவே, பிரதமரின் இயற்கை விவசாயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவை தமிழக அரசு உறுதியாக எதிா்க்க வேண்டும். தமிழ்நாட்டு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதார நலன்களைப் பாதுகாக்க முதலவா் விஜய் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.