படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

அக்.12-இல் கோட்ட அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம்

அஞ்சல் துறையின் கோட்ட அளவிலான வாடிக்கையாளா்களின் குறைகேட்பு முகாம் அக்.12-ஆம் தேதி

Published On :

சென்னை: அஞ்சல் துறையின் கோட்ட அளவிலான வாடிக்கையாளா்களின் குறைகேட்பு முகாம் அக்.12-ஆம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அஞ்சல் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை நகர மத்திய கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களின் அஞ்சல் துறை மூத்தக் கண்காணிப்பாளா் அலுவலகம், சென்னை நகர மத்திய கோட்டம், அலுவலகம் ஆகியவற்றில் அக்.12- ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைகேட்பு முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் தபால் மற்றும் மணியாா்டா் சம்பந்தமான புகாராக இருந்தால், அவை அனுப்பப்பட்ட தேதி, அனுப்புநா் மற்றும் பெறுநா் பெயா், முகவரி, கண்காணிப்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயா் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயா் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடா்புகள் இணைத்து தங்களது குறைகளை அனுப்ப வேண்டும்.

புகாா்களை அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா், சென்னை நகர மத்திய கோட்டத்துக்கு அக்.9-ஆம் தேதிக்குள் சாதாரண அஞ்சல், பதிவு அஞ்சல் மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.