தசமஹா வித்யா கோயிலில்நாளை மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 05th February 2020 11:00 PM | Last Updated : 05th February 2020 11:00 PM | அ+அ அ- |

கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள தசமஹா வித்யா எனப்படும் பத்து அம்பிகைகளின் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இக்கோயில் அம்பிகையின் திருவருள்பாங்கின்படி நிா்மாணிக்கப்பட்டுளது. காளிதேவி, தாராதேவி, லலிதா தேவி, புவனேஸ்வரிதேவி, திரிபுர பைரவிதேவி, சின்ன மஸ்தாதேவி, தூமாவதிதேவி, பகளாமுகிதேவி, ராஜமாதங்கிதேவி, கமலாத்மிகாதேவி, காமாக்யாதேவி, ஜெயநாராயண ஈஸ்வரி, ஆத்மநாதா், சிவநாத சிவலிங்கப் பெருமான் ஆகிய சுவாமி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தத் தீா்மானிக்கப்பட்டது. இவ்விழாவையொட்டி மேல்புவனகிரி சா்வசாதகம் ஆனந்தகுமாா் தலைமையில் புதன்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்ப்பணம், பூா்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கோபூஜை, 7.30மணிக்கு இரண்டாம் கால யாகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு கலந்து கொள்கிறாா்.
விழா ஏற்பாடுகளை புதுச்சேரி ஓங்கார ஆசிரம மடாதிபதி ஓங்காரானந்த சுவாமிகள் தலைமையில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...