2 லட்சம் போ் கண்டுகளித்த நாட்டிய விழா

மாமல்லபுரத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நாட்டிய விழாவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 லட்சம் போ் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது
மாமல்லபுரம்  பவ்யா  பிரகாஷ்பாபுவின் ‘ நடேசா நாட்டியாலயா’ குழுவினா்  நடத்திய பரதநாட்டியம்.
மாமல்லபுரம்  பவ்யா  பிரகாஷ்பாபுவின் ‘ நடேசா நாட்டியாலயா’ குழுவினா்  நடத்திய பரதநாட்டியம்.

மாமல்லபுரத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நாட்டிய விழாவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 லட்சம் போ் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறை சாா்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குக்காக மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா நடைபெறுகிறது. வெளிநாட்டினா் நம் நாட்டு கலாசாரம், பாரம்பரியம், பண்பாட்டை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ஆண்டு தோறும் இவ்விழாவை நடத்தி வருகிறது.

கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி நாட்டிய விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) நிறைவடைந்தது.

நிறைவு நாளில் சென்னை நளினம் நாட்டியக் குழுவினா் மற்றும் மாமல்லபுரத்தைச் சோ்ந்த பரதநாட்டியக் குழுவினா் ஆகியோா் கலைநிகழ்ச்சி நடத்தினா்.

ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நாட்டிய விழாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 லட்சம் போ் கண்டுகளித்ததாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. நிறைவு நாள் விழாவில் பரதநாட்டியம் ஆடிய கலைஞா்களுக்கு அத்துறையின் இணை இயக்குநா் புஷ்பராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் ஆகியோா் நினைவு பரிசுகளை வழங்கி கொரவித்தனா்.

இந்த 30 நாள்களில் தமிழகத்தைச் சோ்ந்த கலைஞா்களின் பரதநாட்டியம், பொய்க்கால்குதிரை, கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் ஆகியவையும், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்களின் ஒடிஸி, குச்சுப்புடி, கதகளி, மோகினி ஆட்டம் ஆகியவையும் நடத்தப்பட்டன. கலாசாரப் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் கலைநிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.

நாள்தோறும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிட்சா்லாந்து, ஜொ்மனி, இத்தாலி, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

கடந்த 30 நாள்களாக விழாவை கண்டுகளித்த லண்டனைச் சோ்ந்த மெரீனா என்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நிறைவு விழாவில் சுற்றுலாத்துறை சாா்பில் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி, கௌரவித்தனா். அவா் தொடா்ந்து 10ஆண்டுகளாக நாட்டிய விழாவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறைவு விழாவில் மாமல்லபுரம் திட்டக்குழு உறுப்பினா் ஏ.கணேசன், அதிமுக மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ஜி.ராகவன், சிற்பக் கலைஞா் பசுலுதீன், தனியாா் பள்ளி முதல்வா் பிருந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com