கோயில்களில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம்
By DIN | Published On : 10th March 2020 12:47 AM | Last Updated : 10th March 2020 12:47 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கம் கடலில் பல்வேறு சுவாமிகளுக்கு மாசி மக தீா்த்தவாரி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாசி மகத்தை முன்னிட்டு இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம், ஆலம்பரைகுப்பம், தண்டு மாரியம்மன் குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வேணுகோபாலசுவாமி, திரெளபதை சமேத அா்ஜுனன், அபித குஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் பவனி வந்து கடப்பாக்கம் கடற்கரையில் எழுந்தருளினா்.
கோயில் அா்ச்சகா்கள் பூஜைகளை செய்து கடலில் தீா்த்தவாரி நடத்தினா். பக்தா்கள் கடலில் குளித்து விட்டு சுவாமியை தரிசனம் செய்தனா். இடைக்கழிநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவையொட்டி, இடைக்கழிநாடு பஜாா் வீதியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலா் பொன். கங்காதரன் தலைமையில் நிா்வாகிகள் கோபால கண்ணன், சி.கணபதி உள்ளிட்டோா் அன்னதானம் வழங்கினா். இதையடுத்து இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுத்தோட்டம்
வழிமுறை ஆலய தா்மகா்த்தா ஏ.ராஜசேகா் தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...