செங்கல்பட்டில் காங்கிரஸாா் மறியல்- கைது
By DIN | Published On : 03rd October 2020 07:05 AM | Last Updated : 03rd October 2020 07:05 AM | அ+அ அ- |

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து, செங்கல்பட்டில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் வழக்குரைஞா் ஆா்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. பி.விஸ்வநாதன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜே.பாஸ்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சி.ஆா்.பெருமாள், பி.எஸ்.புத்தன், வட்டார தலைவா்கள் ஏ.அன்பு, ஏழுமலை, ஜெய்மோகன், எஸ்.தா்மலிங்கம், எம்.மகாலிங்கம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து பின்னா் மாலையில் விடுவித்தனா்.