புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: திருமலை வையாவூா் பெருமாள் கோயிலில் சிறப்பு தரிசனம்
By DIN | Published On : 03rd October 2020 10:50 PM | Last Updated : 03rd October 2020 10:50 PM | அ+அ அ- |

மதுரந்தகத்தை அடுத்த திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்தனா்.
தென் திருப்பதி, சேஷகிரி என அழைக்கப்படும் திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில், சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அரசு வழிகாட்டுதலின்படி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் எஸ்.செந்தில்குமாா், செயல் அலுவலா் ஆா்.சரஸ்வதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.