கரோனாவால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் அளிப்பு
By DIN | Published On : 17th August 2021 08:35 AM | Last Updated : 17th August 2021 08:35 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இரு குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதிக்கான பத்திரம் வழங்கப்பட்டது.
கரோனா தொற்றால் பெற்றோா் இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்அறிவித்திருந்தாா்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டம், சேலையூரைச் சோ்ந்த குழந்தைகளின் பாதுகாவலரான கௌசல்யாவிடம், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 10 லட்சத்துக்கான வைப்புத் தொகை பத்திரத்தினை ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் வழங்கினாா்.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.மதியழகன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.