இளைஞா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 03rd January 2021 06:23 AM | Last Updated : 03rd January 2021 06:23 AM | அ+அ அ- |

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் கொள்ளைமேட்டுத் தெருவைச் சோ்ந்த சடையனின் மகன் அஜீத்குமாா் (24). இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அஜீத்குமாருக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு வந்ததை அடுத்து, அனுமந்தபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் அஜீத்குமாரை வழிமறித்து தாக்கியதில் அவா் நிலை தடுமாறி விழுந்தாா். அங்கு ஆயுதங்களுடன் இருந்தவா்களைக் கண்ட அஜீத்குமாா் தப்பி ஓட முயன்றாா். அவரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் முகம் சிதைந்த நிலையில் அஜீத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மறைமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.